Followers

Monday, October 01, 2012

ஹஜ் பயணம் இனி மெட்ரோ ரெயிலில்!



இந்த வருட ஹஜ் பயணத்தில் இனி ஹாஜிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம். இதனால் 25 லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் இடம் பெயரும் போது ஏற்படும் போக்கு வரத்து சிக்கல்களை எளிதாக்கலாம். குழந்தைகள், பெண்கள், வயதானவர்களுக்கு இந்த மெட்ரோ திட்டம் மிக உபயோகமாக இருக்கும். முன்பெல்லாம் ஹஜ் நாட்களில் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு வாகனத்தில் செல்ல 5 மணி நேரம் ஆறு மணி நேரம் கூட காத்திக்கிடக்க நேரும். தற்போதய மெட்ரோ பயணத்தால் அந்த சிரமங்கள் வெகு இலகுவாகும்..





ஒரு வார ஹஜ் கிரியைகளை முடிக்க நீங்கள் 250 ரியால் டிக்கெட் எடுத்து அதனை ஏழு நாட்களுக்கும் பயன் படுத்திக் கொள்ளலாம். மற்றொரு டிக்ககெட் 100 ரியால் பெறுமானமுள்ளது. இதனை ஹாஜிகள் நான்கு நாட்கள் மட்டுமே பயன் படுத்திக் கொள்ள முடியும். ஆங்கிலமும் அரபியும் தெரியாமல் ஹாஜிகள் சிரமப்படக் கூடாது என்பதற்காக ரயிலில் பயணிப்போருக்கு வசதியாக அவர்களின் பயணத்தை காட்டும் விதமாக மூன்று கலர்களில் கைகளில் கட்டிக் கொள்ள சில டேக்கள் தருவார்கள். ஹாஜிகளை அழைத்து வந்த வழிகாட்டிகள் அதன் பயன்களை ஹாஜிகளுக்கு விளக்கிச் சொல்வார்கள். இதனால் ஹாஜிகள் சரியான இடத்தில் ஏறி இறங்க வசதியாக இருக்கும்..

6.7 பில்லியன் ரியால் (1.8 பில்லியன் டாலர்) இந்த ரயில்வே பணியை முடிக்க செலவாகியுள்ளது. இந்த வருடம் முதல் ஹாஜிகள் மெட்ரோ ரயிலின் பலனை அனுபவிக்கலாம் என்று ரயில்வே துறைக்கான செகரட்டரி ஜெய்னுல்லாபுதீன் தெரிவித்தார். இந்த மெட்ரோ பணிகளை சைனாவின் ஒரு கம்பெனி காண்ட்ராக்டை வென்றெடுத்து தற்போது பூர்த்தி செய்துள்ளது. 5000 பணியாளர்கள் இரவு பகல் பாராது பணி புரிந்து தற்போது பணியினை முடித்துள்ளார்கள். மன்னராட்சியோ, மக்களாட்சியோ, சர்வாதிகார ஆட்சியோ, ஜனாதிபதி ஆட்சியோ எதுவாக இருந்தாலும் தனது நாட்டு மக்களையும் உலக மக்களையும் சுபிட்சமாக வைத்திருக்க நினைக்கும் ஆட்சியாக இருந்தால் அது எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள் விரும்புவர் என்பதற்கு சவுதி ஆட்சி ஒரு உதாரணமாகத் திகழ்கிறது..





வளைகுடாவைப் பொருத்த வரை துபாய்க்கு அடுத்தபடியாக இது இரண்டாவது மெட்ரோ ரயில் பயணமாக பார்க்கப்படுகிறது. ஆடம்பர செலவுகளை சவுதி அரசு அதிகம் செய்வதில்லை. இது போன்று அத்தியாவசிய செலவுகளுக்கு அதிகம் பணம் ஒதுக்கி உலக ஹாஜிகளுக்கு சவுகரியம் செய்து கொடுத்துள்ளார்கள். ஹஜ் கடமைகளை பொருத்த வரை அநேகமான நபர்கள் 50 வயதுக்கு மேல் தான் புறப்பட்டு வருவார்கள். இவர்கள் ஹஜ் கடமைகளை செய்யும் போது அலைச்சலினால் மிகவும் சோர்ந்து விடுவார்கள். அதுவும் 25 லட்சம் மக்களுக்கு மத்தியில் இந்த கிரியைகளை செய்வது வயதானவர்களுக்கு சற்று சிரமம்தான். ஹரமிலிருந்து அரஃபா, மினா, முஸ்தலிஃபா போன்ற இடங்களுக்கு இனி ஹாஜிகள் சிரமமின்றி பயணிக்க முடியும். பாதிக்கு மேல் பயணிகளை மெட்ரோ ரயில் சுமப்பதால் ரோடுகளில் இனி அத்தனை நெரிசல்கள் இருக்காது..


எல்லாம் சரி....நம்ம சென்னைக்கு அம்மா என்னைக்கு மெட்ரோ ரயிலை கொடுக்கப் போறாங்க? ஏற்கெனவே மு க ஸ்டாலின் முயற்சியில் மேம்பாலங்கள் எல்லாம் கட்டப்பட்டன. அதன் நிலையும் என்னவென்று தெரியவில்லை. அதே ரூட்டில் தான் மெட்ரோ ரயிலும் வருகிறதா? அல்லது ஸ்டாலின் போட்ட பாதையில் நான் எப்படி ரயில் உடுறது என்று அம்மா தனி பாலங்கள் கட்டுறாங்களா தெரியலயே!

-----------------------------------------------------



இன்னா வாத்யாரே! ஹஜ் செய்ய வந்திக்கினியா! வெள்ளை டிரெஸ்ஸில் ஷோக்கா இக்குதுபா! உன்னை விட அந்த பெட்டி கனமா இருக்கும் வாத்யாரே! பாத்து இஸ்திகினு போ. வர்ட்டா!:-)

41 comments:

Unknown said...


// ஆடம்பர செலவுகளை சவுதி அரசு அதிகம் செய்வதில்லை.//

உலக பொய் ...

அதிகம் என்ற வார்த்தையை போட்டு வார்த்தை மாயஜாலம் செய்றீங்க ...

ஆனால் சவூதிக்கு இவ்வளவு செம்பு அடிக்க கூடாது நா ...

பிறந்த மண்ணை நேசியுங்கள் ... இது தான் நபி வழி ... உங்களுக்கு தெரியாத ஒன்றும் இல்லை ...

நானும் பாத்துகிட்டேதான் வரேன் ... சவுதி அதிக செம்பு நீங்க அடிகிறீங்க ... கடுப்பு வருது ...

ஹுஸைனம்மா said...

சென்ற வருடம் குறிப்பிட்ட (முன்பதிவு செய்த)மக்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது என்று சொன்னார்கள். இந்த வருடம் அனைவருக்குமே ரயில் பயண அனுமதி உண்டா? தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும் டிக்கட் வாங்கலாமா அல்லது நம்மை அழைத்துச் செல்லும் டிராவல்ஸ்காரர்கள் மூலம், முன்னரே முன்பதிவு செய்ய வேண்டுமா?

Unknown said...

மற்ற படி

அருமையான பதிவு ...

இன்னும் கொஞ்ச விரிவா எழுதீருக்கலாம் ...

ஒரு TRIP ல் எத்தனை பேர் பயணிக்கலாம் ...

மக்காஹ் டு மதினா மெட்ரோ பணி முடிச்சுடாங்களா ?

இருந்தாலும் ஹஜ் செய்வதற்கும் மதினாவிற்கும் சம்பந்தம் இல்லை ..

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் சகோ....

நல்ல தகவல்....கடைசி படம் அருமை ...

suvanappiriyan said...

சகோ சிந்தனை!

//பிறந்த மண்ணை நேசியுங்கள் ... இது தான் நபி வழி ... உங்களுக்கு தெரியாத ஒன்றும் இல்லை ...

நானும் பாத்துகிட்டேதான் வரேன் ... சவுதி அதிக செம்பு நீங்க அடிகிறீங்க ... கடுப்பு வருது ...//

சவுதியின் நிர்வாகம் சிறப்பாக உள்ளது என்று சொன்னால் நான் பிறந்த மண்ணை நேசிப்பது பற்றி பாடம் எடுக்கும் உங்கள் புரிதலை என்னவென்பது? ஒரு தேர்தலுக்கு நம் நாட்டில் எத்தனை கோடி விரயமாகிறது என்பது தெரியும். அப்படி விரயமான பணத்துக்கு நாட்டுக்கு நன்மை கிடைத்துள்ளதா என்றால் பூஜ்யமே! வரிப்பணம் வீணானது மாத்திரம் அல்ல மக்களுக்கு தொல்லையும் அதிகரித்துள்ளது. ஸ்டாலின் கொண்ட வந்த திட்டம் என்பதற்காக அதனை கிடப்பில் போட்டு 'மெட்ரோ ரயில்' என்ற புது அறிமுகத்தை கொண்டு வந்த அம்மாவின் நிர்வாக திறன் எப்படி? அதே போல் பல கோடி செலவு செய்து திறக்கப்பட்ட புதிய சட்ட மன்ற கட்டிடத்தை துறந்து பழைய இடத்திலேயே தொடரும் அவலம் சரியா? கட்சிக் காரர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வருடா வருடம் டெண்டர் விட்டு அரை குறையாக வேலையை முடிக்கும் சாலை பணிகளை சொல்லவா? டாஸ்மாக் வருமானத்தின் மூலம் அரசை நடத்தும் அவலத்தை சொல்லவா? இது நான் பிறந்த மண் வளமாக வேண்டும் என்ற ஆசையில் எழும் எண்ணங்கள்தான்.

சவுதியை தூக்கி வைத்து கொண்டாடுவதில் எனக்கு எந்த நன்மையும் இல்லை. யாரும் இதற்காக ஒரு பைசா தருவதும் இல்லை.

வஹாபிகளின் ஆட்சி தாலிபான்களை போல் அக்கிரமமாக நடக்கிறது என்ற பொய் பிரசாரத்தை தவறு என்று எடுத்து சொல்வது அதை தெரிந்த ஒவ்வொருவரின் கடமை. அதைத்தான் நான் செய்கிறேன்.

suvanappiriyan said...

சகோ ஹூசைனம்மா!

//சென்ற வருடம் குறிப்பிட்ட (முன்பதிவு செய்த)மக்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது என்று சொன்னார்கள். இந்த வருடம் அனைவருக்குமே ரயில் பயண அனுமதி உண்டா? தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும் டிக்கட் வாங்கலாமா அல்லது நம்மை அழைத்துச் செல்லும் டிராவல்ஸ்காரர்கள் மூலம், முன்னரே முன்பதிவு செய்ய வேண்டுமா?//

இது பற்றி இன்னும் சரியாக தெரியவில்லை. முன் பதிவு இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு முறை நீங்கள் எடுத்தால் அதையே ஏழு நாட்களும் பயன்படுத்த முடியும் என்பதால் டிராவல்ஸ் மூலமாக விநியோகிப்பார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் ஓரிரு நாளில் விபரங்கள் தெரிந்தால் பகிர்கிறேன்.

Unknown said...

இந்த மக்கா மெட்ரோ ப்ராஜெக்ட் ல தான் சீனர்கள் 600 பேர் இஸ்லாத்தை தழுவினார்கள் ...

A Chinese company, part of a Saudi-French-Chinese consortium won the contract and has sent 4,600 Chinese nationals to work on this rail project. Last year alone, over 600 more embraced Islam. Alhamdulillah we were contacted to provide a Hajj guide in Chinese for the 150 Chinese workers who performed hajj last year. Here are some quotes of the new muslims:

Hamza, 42, said he embraced Islam after he saw the Holy Ka'aba for the first time on Saudi television. "It had an electrifying effect on me. I watched the live transmission of prayers at the Grand Mosque and the circling of the faithful around the holiest shrine in Islam," Hamza feels happier and more relaxed now that he has become a Muslim.

Fifty-one-year-old Ibrahim is another Chinese worker who embraced Islam in September last year. "While we were in China, we did not have any opportunity to learn about Islam. When I reached Makkah, I was very impressed by the behavior of many of its residents. Their equal treatment of Muslims and non-Muslims had a big impact on me," he said.Ibrahim, who is working with the maintenance section of the state-owned Chinese Railway Company, says that he, like Hamza, became a Muslim when he saw the Ka'aba.

Abdullah Al-Baligh, 51, was inspired to embrace Islam after seeing the positive changes in his colleagues. "Six months after I arrived in Makkah, I noticed that my colleague, who was already a Muslim by birth, had totally changed and his behavior and conduct were exemplary. I realized that Islam was the guiding force behind these changes," he said."When I asked him, he told me that he had known nothing about the religion while in China. Now, he had a proper understanding of Islam and wanted to become more of a role model.

"Younus, another worker, says that he became a practicing Muslim only after his arrival in Makkah." Islam in China is lacking. I realized about this only after coming over to the Kingdom. Many of my Muslim colleagues and I only truly learned about Islam in the holy city.

Unknown said...

//சவுதியின் நிர்வாகம் சிறப்பாக உள்ளது //

இஸ்லாத்தின் படி பார்த்தால்

உதாரணம் : தராவீஹ் தொழுகையை எடுத்து கொண்டால் மக்காஹ் , மதினாவில் மட்டும் 20 ரக்காயத் தொழுகை ... மற்ற சவுதி இடங்களில் ஏன் 8 ரக்காயத் ...

இது ஏன் ?

சவுதி POPPULATION ரொம்ப கம்மி 27 BILLION தான் இருக்காங்க [ APPROXIMATE TILL 2011 ] வருமானமும் அதிகம் .. வளர்ந்த நாடு ...

இங்க இந்தியாவில் 120 கோடிக்கு அதிகம் இருக்காங்க .. என்னாத்த IMPLEMENT பண்ண முடியும் ... [குறிப்பு : பக்கத்துல இருக்கிற சீன நாடு அதிக மக்கள் தொகை இருக்கே ன்னு கேட்க கூடாது ... ஏன்னா எனக்கு பதில் தெரியாது ...]

UNMAIKAL said...

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கிற்கு என்ன விலை போல இருக்கே.. - ஜெயலலிதா.

சென்னை: ரயிலில் எடுத்துச் செல்லப்படும் சரக்குகளுக்கான சேவை வரி விதிக்கப்பட்டிருப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு உருளை வழங்குவதில் கட்டுப்பாடு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு, ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகும்.

இந்த வரிசையில் 1.10.2012 முதல் ரயில் மூலம் எடுத்துச் செல்லப்படும் சரக்குகளுக்கான கட்டணங்களின் மீது 12 விழுக்காடு சேவை வரியை விதித்து மக்களை ஆற்றொணாத் துயரத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வழிகாட்டுதலின் பேரில் செயல்படும் மத்திய அரசு ஆளாக்கியுள்ளது.

இச் செயல் எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினால் போல் அமைந்துள்ளது.

இந்திய ரயில்வே அமைச்சகம் தனது 27.9.2012 நாளிட்ட அறிக்கையில், சரக்குகளுக்கான 30 விழுக்காடு கட்டணத்தின் மீது 12 விழுக்காடு சேவை வரி விதிக்கப்படும் என்றும்,
அந்த சேவை வரி மீது 2 விழுக்காடு கல்வி வரியும், 1 விழுக்காடு உயர் கல்வி வரியும் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

ரயிலில் உயர் வகுப்புகளில் பயணம் செய்பவர்களுக்கான கட்டணங்களின் மீதும் சேவை வரி, அதன் மீதான கல்வி வரி மற்றும் உயர் கல்வி வரி ஆகியவை விதிக்கப்பட்டுள்ளன.

சலுகைக் கட்டணத்தில் பிரயாணம் செய்யக் கூடிய மூத்த குடிமக்கள், சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கும் இந்த வரிவிதிப்பு பொருந்தும் என்றும்,

முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டை ரத்து செய்தாலும், சேவை வரிக் கட்டணம் ரயில்வே நிர்வாகத்தால் திரும்பத் தரப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான கட்டணங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு வகைகளுக்கான கட்டணங்கள் ஆகியவற்றின் மீதும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

சரக்குகளுக்கான 30 விழுக்காடு கட்டணத்தின் மீது சேவை வரி, அதன் மீது கல்வி வரி மற்றும் உயர் கல்வி வரி விதிக்கப்படுவதன் மூலம் அனைத்துப் பொருட்களின் விலைகள் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பணவீக்கம் மேலும் உயரக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ரயில்வே துறையின் சார்பில் நடப்பாண்டில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையிலேயே,

இந்த இனங்களின் கீழ் சேவை வரி விதிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டிருந்த போதும்,

அப்போது மத்திய காங்கிரஸ் கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த ஒரு கட்சியின் நிர்பந்தத்தின் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக இந்த வரிவிதிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது அந்தக் கட்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகியுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும்,

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தற்போது அங்கம் வகிக்கும் கட்சிகள் இதனை எதிர்க்காது என்பதை அடிப்படையாக வைத்தும், 1.10.2012 முதல் சேவை வரி விதிப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்.

பொதுமக்களும், பொருளாதார வல்லுநர்களும், விஷம் போல் உயர்ந்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் என்றும்,
உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில்,

மத்திய அரசின் இந்த நடவடிக்கை பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கிற்கு என்ன விலை என்று சொல்லுகிறார்கள் என்ற பழமொழிக்கு ஏற்றால் போல் முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.

மத்திய அரசின் இது போன்ற மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு,

இந்தச் சேவை வரி விதிப்பினை உடனே கைவிட வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


User Comments

ரா ஜா 01 Oct 2012 12:32 pm

விலை குறைப்பை பற்றி பேச ஜெயாவுக்கு தகுதி இல்லை...


பாலாஜி 01 Oct 2012 11:03 am

பால் விலை, பஸ் கட்டண உயர்வு, மின்சார கட்டண உயர்வு போன்ற மக்கள் விரோதச் செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த எங்களுக்கு ஒரு பைசா கூட குறைக்காத நீங்க, இந்தச் சேவை வரி விதிப்பினை உடனே கைவிட வேண்டுமென்று மத்திய அரசை கேட்பது சிறு பிள்ளை தனமாஉம், நகைப்புதனாமா தெரியலையா?


pamukrish 01 Oct 2012 10:55 am

ஆடு நனையுதே இன்னு ஓநாய் அழுவுது. நீ முதல்ல பஸ் கட்டணம், சேல்ஸ் டக்ஸ், இலவசங்களை குறைத்து மக்களுக்கு நன்மை செய்யேன் பார்க்கலாம்.

SOURCE: http://tamil.oneindia.in/news/2012/10/01/tamilnadu-jayalalithaa-demands-roll-back-train-fare-hike-162383.html

Unknown said...

கடைசி படத்துல அந்த பையன் கருப்பு கயிறு [ தாயத் ] மாடிருக்கான் போல தெரியுது ...

இணைவைத்து கொண்டே ஹஜ் செய்தால் ஹஜ் கூடுமா ?

Unknown said...

வரவேற்கப்பட வேண்டிய ஒன்று... பயனாளிகளுக்கு பயன் பெறுவர்...

suvanappiriyan said...

//கடைசி படத்துல அந்த பையன் கருப்பு கயிறு [ தாயத் ] மாடிருக்கான் போல தெரியுது ...

இணைவைத்து கொண்டே ஹஜ் செய்தால் ஹஜ் கூடுமா ?//

ஹா..ஹா....மந்திரித்த கயிறு கட்டிக் கொண்டு வந்தால் சவுதியில் உள்ள மார்க்க அறிஞர்கள் அதனை அழகாக அறுத்து விடுவார்கள். அது அந்த பேக்கோடு சேர்ந்த கைப்பிடியாக இருக்கலாம்.

Unknown said...

நல்ல தகவல்..இனி ஹஜ்ஜாலிக்களுக்கு சிரமமில்லை. எங்க குடும்பத்தில் இன்னைக்கு தான் கிளம்பினாங்க. இன்ஷா அல்லாஹ் அவங்களுக்கு இந்த தகவலை சொல்லிவிடுகிறேன்.

Unknown said...

கடைசி படம் அந்த பையன் அழகாக இருக்கிறான்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
அஸ்மா said...

சலாம் சகோ! உபயோகமான தகவல்கள், அல்ஹம்துலில்லாஹ். என்னுடைய பதிவிலும் லிங்க் கொடுத்திருக்கேன் சகோ.

ஒரு வாரத்திற்கோ 4 நாட்களுக்கோ எடுக்கும் டிக்கெட், வாங்கிய அன்றிலிருந்தே பயன்படுத்திய‌ கணக்கில் இருக்குமா? அல்லது பயன்படுத்திய ஆரம்ப நாள்தான் கணக்கா? ஏன் கேட்கிறேன் என்றால், இங்கு அதுபோன்ற டிக்கெட்கள் (ஒருநாள் பாஸ் தவிர மற்றவை) நாம் வாங்கிய தேதியிலிருந்து சரியாக 1 வாரத்தில் (பயன்படுத்தாவிட்டாலும்) அதன் valid முடிந்துவிடும். ஆனால் லண்டனில் நாம் எவ்வளவு நாட்களுக்கு முன் டிக்கெட் எடுத்தாலும், பயன்படுத்திய அன்றிலிருந்துதான் கணக்காகும். அதனால் அதன் விபரம் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்க சகோ. லண்டன் டைப்பில் இருந்தா ரொம்ப வசதியா இருக்கும். அத்துடன் ஹுஸைனம்மா கேட்ட விபரத்திற்கும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கேன்.

k.rahman said...

போன வருஷமே ரயில் விட்டுடாங்களே. ஆனா musdalifaah ல இருந்து அரபா வரைக்கும். இப்ப ஹரம் வரைக்கும் extend பண்ணிட்டாங்களா? ரொம்ப வசதி.

suvanappiriyan said...

சலாம் சகோ அஸ்மா!

//ஒரு வாரத்திற்கோ 4 நாட்களுக்கோ எடுக்கும் டிக்கெட், வாங்கிய அன்றிலிருந்தே பயன்படுத்திய‌ கணக்கில் இருக்குமா? அல்லது பயன்படுத்திய ஆரம்ப நாள்தான் கணக்கா? ஏன் கேட்கிறேன் என்றால், இங்கு அதுபோன்ற டிக்கெட்கள் (ஒருநாள் பாஸ் தவிர மற்றவை) நாம் வாங்கிய தேதியிலிருந்து சரியாக 1 வாரத்தில் (பயன்படுத்தாவிட்டாலும்) அதன் valid முடிந்துவிடும்.//

ஹஜ் நாட்களுக்காக விஷேசமாக இந்த டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுகிறது. எனவே ஹஜ் முடிந்து இது உபயோகத்துக்கு வருமா என்று தெரியவில்லை. இந்த டிக்கெட்டுகள் அல் தயார் டிராவல் ஏஜன்ஸி மூலமாக விநியோகிக்க உள்ளார்கள். உங்கள் டிராவல் ஏஜண்டகள் இந்த வேலைகளை எல்லாம் பார்த்துக் கொடுப்பார்கள். எனவே இது பற்றி அதிக டென்ஷன் வேண்டாம். காணொளியிலும் ஓரளவு விபரங்கள் உள்ளது. முதல் நாள் புது இடம் என்பதால் கொஞ்சம் படபடப்பு இருக்கும். பிறகு நீங்கள் மற்றவர்களுக்கு வழி காட்டுவீர்கள். அந்த அளவு ஆங்கிலத்திலும், அரபியிலும் வழி காட்ட தொண்டுள்ளத்தோடு பணியாற்றும் நபர்கள் நிறையவே உள்ளனர். போர்டுகளும் ஆங்காங்கே விபரமாக எழுதப்பட்டுள்ளது. இந்த பதிவு எழுதும் போதே உங்கள் ஹஜ் பயண ஞாபகம்தான் முதலில் வந்தது.

சிறப்பாக ஹஜ் பயணம் முடிய பிரர்த்திக்கிறேன். மெக்கா வந்து தொடர்பு கொள்ளுங்கள். மேலதிக விபரம் இருந்தால் தருகிறேன்.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

மெட்ரோ டிரெயின் விட்டிருப்பது நல்ல விடயம் தான், நல்ல வேளை சவுதி அரசுக்கு நவீன மாற்றங்களை கொண்டுவருவதில் பிற்போக்கான எண்ணமில்லை.

//நம்ம சென்னைக்கு அம்மா என்னைக்கு மெட்ரோ ரயிலை கொடுக்கப் போறாங்க? ஏற்கெனவே மு க ஸ்டாலின் முயற்சியில் மேம்பாலங்கள் எல்லாம் கட்டப்பட்டன. அதன் நிலையும் என்னவென்று தெரியவில்லை. அதே ரூட்டில் தான் மெட்ரோ ரயிலும் வருகிறதா? அல்லது ஸ்டாலின் போட்ட பாதையில் நான் எப்படி ரயில் உடுறது என்று அம்மா தனி பாலங்கள் கட்டுறாங்களா தெரியலயே!//

இப்படி சொல்லிட்டு, பின்னூட்டத்தில்,

// ஸ்டாலின் கொண்ட வந்த திட்டம் என்பதற்காக அதனை கிடப்பில் போட்டு 'மெட்ரோ ரயில்' என்ற புது அறிமுகத்தை கொண்டு வந்த அம்மாவின் நிர்வாக திறன் எப்படி? //

இப்படியும் சொல்லுறிங்க, ஹலால் பீர் குடித்து இருக்கீங்களா:-))

மெட்ரோ ரயில் திட்டம் வேலை நடந்துக்கிட்டு தான் இருக்கு, உள்ளூர் (தமிழ்நாடு)செய்தி எதுமே தெரியாமல் சவுதி செய்திகளை மட்டும் கவனிச்சா இப்படித்தான் ஆகும் :-))

சவுதி ஒரு நாடு ,அதற்கு இணை வைத்து தமிழ்நாட்டை பேசுவது, தமிழ் நாடு எனப்பெயரில் நாடு இருப்பதால் ஒரு நாடாக நினைத்து விட்டதாக மக்கள் நினைக்கக்கூடும் :-))

-----

ஆனாலும் பதிவில் உங்கள் "டச்" ஏதோ ஒன்று குறைகிறது...

ஆங்..இப்படி எழுதி இருக்கணும்,

"ஹஜ் யாத்திரைக்கு சவுதி மெட்ரோ டிரெயின் விட்டு விட்டது, எத்தனையோ கோடி வருமானம் உள்ள இந்தியா,அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்த நாடு ...இன்னும் ரயில் போக்குவரத்தினையே ஆரம்பிக்காமல்??!! கையை பிசைந்து கொண்டிருப்பது ஏன்?

நாடு முழுக்க ரயில் போக்குவரத்து ஆரம்பிக்காவிட்டாலும் ,அமர்நாத்திற்கு நிறைய யாத்ரீகர்கள் புனித பயணம் போகிறார்கள் அவர்களுக்காவது ஒரு சாதா ரயில் பாதை போட்டு தரக்கூடாதா?

இதனை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இந்தியா எனது நாடு ,அது நன்றாக இருக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன்", :-))

ஹி...ஹி இப்படி எழுதினால் தான் அது சு.பி.சுவாமிகள் எழுதிய உண்மையானப் பதிவுனு மக்கள் நம்புவாங்க :-))

அஸ்மா said...

//இந்த பதிவு எழுதும் போதே உங்கள் ஹஜ் பயண ஞாபகம்தான் முதலில் வந்தது//

:):)

//சிறப்பாக ஹஜ் பயணம் முடிய பிரர்த்திக்கிறேன். மெக்கா வந்து தொடர்பு கொள்ளுங்கள். மேலதிக விபரம் இருந்தால் தருகிறேன்//

இன்ஷா அல்லாஹ் தொடர்பு கொள்கிறேன் சகோ! கண்டிப்பா துஆ செய்யுங்க. உடன் பதிலுக்கு ஜஸாகல்லாஹ் ஹைரா :)

suvanappiriyan said...

சகோ சிநேகிதி!

//நல்ல தகவல்..இனி ஹஜ்ஜாலிக்களுக்கு சிரமமில்லை. எங்க குடும்பத்தில் இன்னைக்கு தான் கிளம்பினாங்க. இன்ஷா அல்லாஹ் அவங்களுக்கு இந்த தகவலை சொல்லிவிடுகிறேன்.//

உங்கள் குடும்பத்தவரின் ஹஜ் பயணம் சிறப்புற பிரார்த்திக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வவ்வால்!

//இதனை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இந்தியா எனது நாடு ,அது நன்றாக இருக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன்", :-))

ஹி...ஹி இப்படி எழுதினால் தான் அது சு.பி.சுவாமிகள் எழுதிய உண்மையானப் பதிவுனு மக்கள் நம்புவாங்க :-))//

அடுத்த பதிவில் இவ்வாறே எழுதி விடுவோம். :-))))

suvanappiriyan said...

சகோ ரஹ்மான்!

//போன வருஷமே ரயில் விட்டுடாங்களே. ஆனா musdalifaah ல இருந்து அரபா வரைக்கும். இப்ப ஹரம் வரைக்கும் extend பண்ணிட்டாங்களா? ரொம்ப வசதி.//

சகோ ஆயிஷா ஃபாரூக்!

//வரவேற்கப்பட வேண்டிய ஒன்று... பயனாளிகளுக்கு பயன் பெறுவர்...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

காந்தியார் - மகாத்மா காந்தியாரின் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள்!

ஆயிரம் கருத்து வேறு பாடுகள் எழுந்து நின்று திமிர் முறித்தாலும், காந்தியார் உலகத் தலைவர்களின் பட்டியலில் உள்ளதை எவராலும் மறுக்க முடியாது.

காந்தியார் பிறந்த நாள் என்று நாடே கொண்டாடி னாலும், ஏனோ அவர்தம் மறைந்த நாளை நோக்கியும், அவர் மரணத்திற்கு ஆளாக்கப்பட்ட கொலை பற்றியும் தான் பாழும் மனம் தாவிச் செல்லுகிறது - பதைபதைக்கிறது! காந்தியார் படுகொலைக்கான பின்னணி இந்துமத வெறி என்பது வெளிப்படை! என்றைக்குக் கீதையிலிருந்து சுலோகங்களை எடுத்து நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் நெற்றுத் தேங்காயை உடைத் தது போல் சொன்னானோ அன்றைக்கே அம்பலமாகி விட்டது இந்துத்துவாவின் பிண நாற்றம் - பார்ப்பனீ யத்தின் படுமோசம்!

ஆனாலும் அவர் மரணத்துக்குப் பின்னணியிலிருந்த முழு சதியும் இன்னும் நிலுவையில் தான் உள்ளது. நமக்கு மட்டுமல்ல - காந்தியாரின் மூன்றாவது மகன் மணிலால் அவரின் மகன் அருண்காந்தியின் மகன் துஷார்காந்தி.

அவர் எழுதிய ஒரு நூல் காந்தியைக் கொல்வோம்! என்பதாகும். (டுநவள முடைட ழுயனோ).

அந்த நூல் சென்னையில் 2007 மார்ச்சில் வெளியிடப் பட்டது. அப்பொழுது செய்தி யாளர் கேட்ட கேள்விக்குக் காந்தியாரின் பெயரன் சொன்னபதில் அதிர்ச்சிக்கு உரியதே! ஆறாவது முயற்சியில் தான் பாபுஜி சுட்டுக் கொல்லப்பட்டார். முந்தைய அய்ந்து முயற்சிகளிலும் கொலையாளிகள் சில துப்புகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றைப் பின்பற்றி போயிருந்தாலே, பாபுஜி சுடப்படுவதற்குக் காரணமான முக்கிய குற்ற வாளிகளை மிகச் சுலபமாக கைது செய்திருக்கலாம்.

நாதுராம் கோட்சே மட்டும் மூன்று முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததற்கான ஆதா ரங்கள் கிடைத்துள்ளன.

பாபுஜி சுட்டுக் கொல்லப் படுவதற்கு 15 நாட்களுக்கு முன் பிர்லா மாளிகையில் கோட்சே கோஷ்டியினர் வெடிகுண்டு வீசினர்; அது தோல்வியானது. அப்போது டில்லி காவலரிடம் பிடிபட்ட மதன்லால் பாக்வா கொடுத்த தகவலின் பேரில் கோட்சே குழுவினர் தங்கியிருந்த மெனோ ஓட்டல் அறையைச் சோதனையிட்டு சூஏழு என்ற இனிஷியல் பொறித்த உடைகளைக் கண்டெடுத் தனர். அதன் மூலம் தடயம் கிடைத்து, உடனடியாக அந்த விசாரணைக் குழுவினர் பாம்பே சென்று, பாம்பே காவல்துறையிடம் கோட்சேயைக் கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டிருக்கிறார்கள். சரி என்று உத்தரவாதம் கொடுத்த பாம்பே காவல்துறை ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. அடுத்த 15ஆவது நாளில் பிர்லா மாளி கையில் அந்த கொலைக் குழுவினர் பாபுஜி யைக் கொன்று விட்டனர் என்றாரே!
சொன்னவர் காந்திஜியின் கொள்ளுப் பேரன் -நினைவிருக்கட்டும்.

கோட்சேவுக்குத் தூக்கு! அவரின் குருநாதன் - சூத்ரதாரி சாவர்க்காரோ நாடா ளுமன்றத்தில் - நடுநாயகமாகச் சிரிக்கிறாரே பிரதமர் உட்பட மாலை அணி விக்கிறார்கள் - என்ன சொல்ல!

------------------------- மயிலாடன் அவர்கள் 2-10-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

suvanappiriyan said...

ராஜராஜன்!

//சரி!இவைதான் பழைய கதைதான் பேரான்டி பழைய கதைன்னு மறந்து போனாலும் காஷ்மீர் பண்டிட்கள் படுகொலைகள் பற்றி பேசினால் இந்துத்வா சார்பு நிலை மாதிரி தோன்றுமென்பதால் அமெரிக்க ட்வின் டவர் படுகொலைகள்,லண்டன் குண்டுவெடிப்பு,மிக மிக சமீபமாக லிபிய இஸ்லாமிய தூதரக படுகொலை என பட்டியல் நீள்கிறது.

மற்ற எந்த இசங்களையும் விட இஸ்லாமியம் ரத்தத்தால் தோய்ந்தது என்றும் கூட வாதிடலாம்தானே?//

ஹி..ஹி..லிபிய தூதரை தாக்கியது யார் என்பதை பிரிட்டிஷ் எம்பி யே சொல்றாருங்கோ!

http://suvanappiriyan.blogspot.com/2012/09/blog-post_24.html

9 11 யார் வேலை என்பதன் பல உண்மைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. வேறு ஏதாவது முயற்சி பண்ணுங்கோ!

http://video.google.com/videoplay?docid=1957490867030316250&ei=JspdSaLNBZa4qAObztThDw&q=steve+jones+boston

பிறகு எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றம், பவுத்தர்கள் ஆரியர்களால் கறுவறுக்கப்பட்டது என்று எல்லாத்தையும் பேசிட்டீங்கன்னா ஒரு முடிவுக்கு வந்துரலாம். :-)

Rabbani said...

///சவுதி POPPULATION ரொம்ப கம்மி 27 BILLION தான் இருக்காங்க [ APPROXIMATE TILL 2011 ] வருமானமும் அதிகம் .. வளர்ந்த நாடு ...////
27 million brother
1000 million= 1 billion
http://wiki.answers.com/Q/One_billion_equals_how_many_million

அதாவது பத்து லட்சம் ஒரு மில்லியன்
நூறு கோடி ஒரு பில்லியன்
1000 billion one trillion

Unknown said...

சகோதரர் சுவனப் பிரியன்,

ஐரோப்பிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு, உம்ரா விசா எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று, சவூதியில் சட்டம் கொண்டு வரப்போகிறார்கள் என்று கேள்விப் பட்டேன்.

அது உண்மையா என்று கேட்டுச் சொல்லுங்கள்.

suvanappiriyan said...

சகோ யூசுப் இஸ்மத்!

//ஐரோப்பிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு, உம்ரா விசா எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று, சவூதியில் சட்டம் கொண்டு வரப்போகிறார்கள் என்று கேள்விப் பட்டேன்.

அது உண்மையா என்று கேட்டுச் சொல்லுங்கள்.//

இந்த செய்தி எனக்கும் புதிது. விசாரித்து சொல்கிறேன். ஐரோப்பிய நாட்டவர் உம்ரா விசாவில் வந்து இங்கு இந்தியா பாகிஸ்தான் இலங்கை நாட்டவர் போல இங்கு தங்கி விட மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இருக்கலாம். விசாரிக்கிறேன்.

ஊர்சுற்றிக்கும், வவ்வாலுக்கும் தொடர்ந்து பதில் அளித்து வருவது மகிழ்ச்சி. தொடருங்கள்.

நம்பள்கி said...

சவுதியில் பொது சுகாதாரம் எப்படி? கொஞ்சம் எழுதுங்கள்...இலவசமா கட்டனமா?

ஸாதிகா said...

அஸ்ஸலாமு அலைக்கும்சகோ.நல்ல தகவல்கள்.மேலதிகதகவல்கள் கிடைத்தான் விரைவில் பகிருங்கள்.

UNMAIKAL said...

// ராஜராஜன்! said

சரி!இவைதான் பழைய கதைதான் பேரான்டி பழைய கதைன்னு மறந்து போனாலும் காஷ்மீர் பண்டிட்கள் படுகொலைகள் பற்றி பேசினால் இந்துத்வா சார்பு நிலை மாதிரி தோன்றுமென்பதால்?//


// ராஜ நடராஜன்2 அக்டோபர், 2012 5:35 pm

காஷ்மீர் பண்டிட்களின் இடம் பெயர்தலை விமர்சிக்காத சகோக்கள் இலங்கை முஸ்லீம்கள் இடம் பெயர்தலை விமர்சிப்பதற்கும் அருகதையற்றவர்கள். //

பண்டிட்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதில் நமக்கு மட்டுமல்ல, காஷ்மீர முஸ்லிம்களுக்கும் கருத்து மாறுபாடு இல்லை.

ஆனால் பண்டிட்கள் + முஸ்லிம்கள் என்றொரு எதிர்வை உண்டாக்கி பண்டிட்களை மட்டும் மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்வதன் பொருளென்ன?

முஸ்லிம்களை `அந்நியர்களாக'ச் சித்திரிப்பதுதானே.

பிரிவினைக் கலவரங்களின் போது ஜம்முவில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 5 லட்சம்.

கட்டாயமாகப் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சம்.

ஆனால் பள்ளத்தாக்கிலிருந்த பண்டிட்கள் யாரும் அப்போது கொல்லப்படவில்லை என்பது நினைவிருக்கட்டும்.

காந்தியடிகளும் கூட இந்த உண்மையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு காஷ்மீர முஸ்லிம்களைப் பாராட்டினார்.

ஊக்குவிப்புடன் வெளியேறியவர்கள் தான் பண்டிட்கள்.

இந்தியாவில் வேறு எந்த அகதிகளுக்கும் வழங்கப்படாத சலுகைகள் இன்று பண்டிட்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

டெல்லியில் மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் கடைகள், அரசு ஊழியர்களுக்கு வேலையின்றியே முழு ஊதியம்...

காஷ்மீரில் தீவிரவாதம் தலையெடுத்திருந்த கடந்த 18 ஆண்டுகளில் எஞ்சிய அப்பாவிப் பண்டிட்கள் மீது பயங்கரவாதம் ஏவப்பட்டதில்லை என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள்.

உளவு சொன்னார்கள், காட்டிக் கொடுத்தார்கள் என்கிற ரீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தனிநபர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்.

குஜராத்தைப் போலவோ, மும்பையைப் போலவோ பெரிய அளவில் இனப் படுகொலையை பண்டிட்கள் மீது காஷ்மீரத் தீவிரவாதிகள் நிகழ்த்தியதில்லை.

இன்னொன்றையும் மனசில் நிறுத்துங்கள்.

காஷ்மீரில் இன்று அகதிகளாகியிருப்பது பண்டிட்கள் மட்டுமல்ல.

அதே அளவில் காஷ்மீரி முஸ்லிம்களும் இடம் பெயர்ந்துள்ளனர். - அ.மார்க்ஸ் (a.marx)

UNMAIKAL said...

// ராஜ நடராஜன்2 அக்டோபர், 2012 5:35 pm said..

.காஷ்மீர் பண்டிட்களின் இடம் பெயர்தலை விமர்சிக்காத சகோக்கள் இலங்கை முஸ்லீம்கள் இடம் பெயர்தலை விமர்சிப்பதற்கும் அருகதையற்றவர்கள். //


ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் பா.ஜ.க.வினரும்

தங்கள் முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரத்துக்காகக்

காஷ்மீர்ப் பண்டிட்களின் மேல் நடத்தப்பட்ட தாக்குதல்களையும்

அதனால் அவர்கள் காஷ்மீரிலிருந்து வெளியேறியதையும் இந்துக் கோயில்கள் தகர்க்கப்பட்டதையும் பற்றிப் பேசிவருகின்றனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, 'காஷ்மீரில் இந்துக்கள் தாக்கிக் கொல்லப்பட்டார்கள். அவர்களது கோயில்கள் தகர்க்கப்பட்டன.

இந்த வெறிச் செயல்களை மதச்சார்பற்ற இந்தியர்கள் ஏன் பேச மறுக்கின்றனர்?'

என்னும் வாதத்தை இந்தப் பிராமணியவாதிகள் தங்கள் செயலை நியாயப்படுத்த முன்வைக்கின்றனர்.

இதில் உண்மையில்லை என்பதை 1993இல் டெல்லியைச் சேர்ந்த ஆங்கிலப் பத்திரிகைக் குழு ஒன்று அம்பலப்படுத்தியது.

ஆனால், இந்திய ஊடகங்களில் பேரளவில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அதை இருட்டடிப்புச் செய்தனர்.


தகர்க்கப்பட்டதாகக் கூறப்பட்ட கோயில்களைப் பற்றிய விவரங்களைப் பெரும் சிரமப்பட்டுப் பா.ஜ.க.விடமிருந்தே பெற்றுக்கொண்டு, அந்தப் பத்திரிகைக் குழு பிப்ரவரி 1993 இல் அனந்த்நாக் பகுதிக்குச் சென்றது.

கோயில்கள் எவ்விதச் சேதமோ அச்சுறுத்தலோ இன்றி இருந்ததை அந்தக் கோயில் பூசாரிகளிடமிருந்தே தெரிந்துகொண்டது. அவற்றைப் புகைப்படமெடுத்தும் வந்தது.

நாங்கள் சென்ற பல ஊர்களில் காஷ்மீரி பண்டிட்கள் வசித்ததையும் சின்னக் கோயில்கள் அங்குக் காவிக் கொடிகளுடன் இருந்ததையும் கண்டோம்.

ஸ்ரீநகரிலிருந்து சிறிய நகரமான ஷோபியனுக்குச் செல்லும் வழியில் பண்டிட்கள் வசித்த பல கிராமங்கள் காலிசெய்யப்பட்டிருந்ததையும் கண்டோம்.

நாங்கள் சந்தித்த தொழிற்சங்கவாதிகளில் (New Trade Union Initiative) பலர் பண்டிட்கள்.
1989இலிருந்து காஷ்மீரிகளின் விடுதலை இயக்கம் ஆயுதமேந்திய போராட்டமாக மாறியது.

பண்டிட்கள் பலர் ராணுவத்தின் ஆள்காட்டிகளானார்கள்.

அந்த ஆள்காட்டி வேலையில் முஸ்லிம்களும் ஈடுபட்டார்கள்.

போராளிகள் மத வேறுபாடின்றி ஆள்காட்டிகளைச் சுட்டுக் கொன்றார்கள்.

அதேசமயம் 1990இன் தொடக்கத்தில், இம்மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஜக்மோகன்



கட்டுரை
காஷ்மீர்: இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவால்

UNMAIKAL said...

TO

ராஜ நடராஜன்,

காஷ்மீரிகளையும் இடமாற்றம் செய்ததை விமர்சிப்பதில்லை" என்று சொல்லும் நீங்கள்...

'காஷ்மீர் பண்டிட்களை இடமாற்றம் செய்தது யார்' என்றும் சொல்லாமல்

"அவர்கள் தற்போது எந்தெந்த(?) ஊரில்,

எத்தனை(?) முகாம்களில்,

எவ்வித உரிமைகளும்(?) அற்று

நம் இந்தியாவில் அகதிகளாக(?) அடைக்கப்பட்டு உள்ளார்கள்" என்றும் சொல்லாமல்

கொல்லப்பட்ட இலங்கை முஸ்லிம்களுக்கு ஆயிரக்கணக்கில் எண்ணிக்கை இருப்பதை போல...

காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு எண்ணிக்கை ("?சிலர்?")சொல்லாததும் ஏனோ..?

UNMAIKAL said...

// ராஜ நடராஜன்2 அக்டோபர், 2012 5:35 pm said ...

.காஷ்மீர் பண்டிட்களின் இடம் பெயர்தலை விமர்சிக்காத சகோக்கள் இலங்கை முஸ்லீம்கள் இடம் பெயர்தலை விமர்சிப்பதற்கும் அருகதையற்றவர்கள். //


கீற்று சிறப்புக் கட்டுரை

தொண்ணூறுகளில் காஷ்மீரில் ஆளுநராக ஜக்மோகன் இருந்தபோது அவருடைய தூண்டுதலின் பேரிலேயே பள்ளத்தாக்கில் இருந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டு டில்லிக்கு அனுப்பப்பட்டனர்.

அப்படி அனுப்பபட்ட பண்டிட்களுக்கு இந்திய அரசாங்கம் டில்லியில் கடைகளையும்,

குடியிருப்புகளையும் ஒதுக்கிக் கொடுத்திருப்பதோடு,

அரசு வேலைகளையும் வழங்கியிருக்கிறது.

காஷ்மீரில் அவர்கள் அரசு ஊழியர்களாக பணி செய்திருந்தால் அதை ஓய்வூதியமாகவும் கொடுக்கிறது.

இலங்கையின் இனப்பிரச்சனை காரணமாக தமிழகம் வந்த ஈழ அகதிகளை இந்தியா திறந்தவெளிக் கழிப்பிடங்களில் கொட்டி வைத்திருப்பது போல்தான் பர்மா, ஆப்கான், வங்க அகதிகளையும் வைத்திருக்கிறது.

திபெத் அகதிகள், காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட்கள் இந்த இரண்டு அகதிகளுக்கும்தான் இந்தியா ஒப்பீட்டளவில் வசதியான ஒரு வாழ்வை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது.

சீனாவுடனான தனது எல்லைப் பிரச்சனையில் திபெத்தை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தும் இந்தியா திபெத் அகதிகளை ராஜமரியாதையோடு கவனித்துக் கொள்கிறது.

காஷ்மீரில் தன் ஆக்ரமிப்பு இராணுவத்திற்கு எதிராக காஷ்மீரிகள் போராடுவதால் பண்டிட்டுகளை இந்துத்துவப் பாதைக்கு திருப்புவதன் மூலம் காஷ்மீரிகளுக்குள் இந்து முஸ்லீம் பிரிவினையைத் தூண்டுகிறது இந்தியா.

அந்தத் தந்திரத்தின் விருந்தோம்பலும் உயர்குடி அங்கீகாரமும் இணைந்துதான் பண்டிட்களுக்கு டில்லியில் வசதியான வாழ்வை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது.

ஆனால் எப்போதும் பெரும்பான்மை முஸ்லீம் மக்கள் பண்டிட்களை தாக்கியதோ அவர்களுக்கு எதிரான வன்முறையிலோ இறங்கியதில்லை.

ஆயுதக் குழுக்கள் போராடிய காலத்தில் எப்படி சில அப்பாவி முஸ்லீம் குடும்பங்கள் உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்டார்களோ அப்படியே சில பண்டிட்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இன்று வெளியேறிய பண்டிட்களின் வீடுகள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில் டில்லியில் வாழும் அவர்களோ டில்லியில் இந்தியாவின் தேசியக் கொடிகளைப் பிடித்தபடி காஷ்மீர்களுக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்து முஸ்லீம் என்று இந்துப் பாசிசம் விதைத்த நச்சுக் கருத்துக்கு அவர்கள் ஆட்பட்டிருக்கிறார்கள். - டி.அருள் எழிலன்


THANKS TO KEETRU.COM

UNMAIKAL said...

// ராஜ நடராஜன்2 அக்டோபர், 2012 5:35 pm said ...

காஷ்மீர் பண்டிட்களின் இடம் பெயர்தலை விமர்சிக்காத சகோக்கள் இலங்கை முஸ்லீம்கள் இடம் பெயர்தலை விமர்சிப்பதற்கும் அருகதையற்றவர்கள். //

//முஸ்லீம் என்ற பெயர் கண்டு முண்டியடித்துக்கொண்டு வருவதில் எனக்கு ஒப்புதல் இல்லை.//


முஸ்லீம்கள் என‌
அதிகப்பிரசங்கி தனமாக "ஆரம் பிய்த்து" இங்கு இழுத்தது நீர்தானே ?

உமது கச்சேரிக்கு இங்கு யாரும் சிங்கி அடிக்கமாட்டார்கள் என இப்பொழுதாவது புரிந்துகொள்ளும்.



// ராஜ நடராஜன்2 அக்டோபர், 2012 7:40 pm

சுயமாக சிந்திக்கவும்,பின்னூட்டங்களிடவும் கற்றுக்கொள்வது விவாதங்களோடு பேச உதவுமென நம்புகிறேன்.நன்றி.//


ஊருக்கு தான் உபதேசமா?

இனிமேலாவது போதிப்பதை கடை பிடிக்கவும்.

உமது சாயம் வெளுத்து நாட்கள் பலவாகிவிட்டது.



.

ஊர்சுற்றி said...

//..நல்ல தகவல்....கடைசி படம் அருமை ......//

ஹஜ் செல்லும் ஒருவர் சொந்த உழைப்பில் செல்ல வேண்டும், மற்றவ்ர்களின் பணத்தில் செல்லக்கூடாது என “ஆதாமிண்டே மகன் அபு” படத்தில் பார்த்த நினைவு!
சிறுவன் தன்னிலும் பெரிய சூட்கேசை இழுத்து உழைக்கிறான் போலும்!

ABDUL RAHMAN said...

01 அக்டோபர் அன்று உம்ராஹ் செல்ல ஜித்தாவிலிருந்து மூன்று பேர் சென்றோம். சவுதி டாக்ஸி டிரைவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் வைத்துக்கொண்டு மக்காஹ் இகமா என்றால் 30 ரியால் ஜெட்டாஹ் மற்றும் ஏனைய ஊர்களின் இகமா என்றால் முறையே 40 ,50 ரியால் கேட்கிறார்கள் .ஹஜ் வந்துவிட்டால் இவர்களுக்கு கொண்டாட்டாம் தான் .இன்னும் ஹஜ் நெருங்க நெருங்க 100 ,200 ரியால் வரையும் வரும்.இன்ஷா அல்லா ஜிட்டாஹ் to மக்காஹ் மெட்ரோ ரயில் வேலை முடிந்துவிட்டால் இதற்கெல்லாம் முடிவு வந்துவிடும்.அப்பொழுதுதான் வெளி நாட்டை சேர்ந்த குறைந்த சம்பளம் உள்ளவர்கள் பயன் அடைவார்கள்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
UNMAIKAL said...

ஒருவரை மணந்த 3 சகோதரிகள்...

கணவரை சமாளிக்க முடியாமல் பிக்பாக்கெட் ராணிகளாக மாறினர்!


சென்னை: ஒரே நபரை மணந்த 3 சகோதரிகள், கணவரின் பெண் பித்தால் வெறுத்துப் போயும்,

வாழ்வதற்கு வழி இல்லாததாலும் பிக் பாக்கெட்காரிகளாக மாறி சென்னைக்கு வந்து பிக்பாக்கெட் அடித்து போலீஸில் சிக்கினர்.

சென்னை அயனாவரம் வெள்ளாள தெருவைச் சேர்ந்தவர் கனகவள்ளி. 23 வயதான இவர் பாரிமுனைக்கு ஷாப்பிங் போனார். ஷாப்பிங்கை முடித்து விட்டு வீட்டுக்கு பஸ்சில் திரும்பினார். அப்போது ஒரு பெண், கனகவள்ளியின் பர்ஸை பறித்துக் கொண்டு ஓடினார். இதையடுத்து அப்பெண்ணை மற்ற பயணிகள் மடக்கிப் பிடித்தனர்.

இந்த நிலையில் அதே பஸ்சில் பயணித்த 2 பெண்கள், பிடிபட்ட பெண்ணை மீட்க போராடினர்.

இதையடுத்து அவர்களையும் பயணிகள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் 3 பேரும் சகோதரிகள் என்று தெரிய வந்தது.

அவர்களது பெயர் 26 வயது அலமேலு, 24 வயது துர்கா, 22 வயது திவ்யா என்றும் தெரிய வந்தது.

இவர்கள் திருத்தணியைச் சேர்ந்தவர்கள்.

மூன்று பேருக்கும் ஒரே கணவர்தான்.

மூன்று பேரையும் மணந்த அந்த நபர் ஒரே வீட்டில் குடித்தனமும் நடத்தி வந்துள்ளார்.

மூன்று பேரையும் அந்த நபர் செக்ஸ் அடிமைகள் போல நடத்தி வந்தாராம்.
மேலும் 4வதாக ஒரு பெண்ணை மணக்கவு்ம் ரூட் விட்டுக் கொண்டிருந்தார்.

இதனால் வெறுத்துப் போன இந்த மூன்று பெண்களும் வீட்டுச் செலவுக்குப் பணம் இல்லாததால் பிக்பாக்கெட்டில் குதித்துள்ளனர்.

அடிக்கடி சென்னைக்கு வந்து பிக்பாக்கெட் அடித்து விட்டுப் போய் விடுவார்களாம்.

ஓடும் பஸ், ரயில் ஆகியவற்றில்தான் இவர்கள் திருடுவார்களாம்.

யாராவது பிடிபட்டால் மற்ற இருவரும் பொதுமக்கள் போல சண்டை போட்டு சிக்கியவரை மீட்டுச் சென்று விடுவார்களாம்.

3 பேரையும் கைது செய்த போலீஸார் கோர்ட்டில் நிறுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

SOURCE: THATSTAMIL.

UNMAIKAL said...

சோனியா செலவுக் கணக்கை கேட்கும் மோடி முதலில் தன் கணக்கைச் சொல்லட்டும் -ஆர்டிஐ சேவகர் விளாசல்

அகமதாபாத்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியினம மருத்துவச் செலவுகள் குறித்து மத்திய அரசிடம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விளக்கம் கேட்டு வரும் நிலையில்,

நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சர்களின் பயணச் செலவுகள் குறித்து ஒரு பெண் தகவல் பெறும் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டுள்ளார்.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக இதற்கான விளக்கத்தை நரேந்திர மோடி அரசு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள், மருத்துவச் செலவுகள், தங்கும் செலவுகளுக்காக ரூ. 1880 கோடி செலவிடப்பட்டுள்ளதாக நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

இதை காங்கிரஸ் மறுத்து வருவதோடு, அதற்கான ஆதாரத்தையும் கோரியது.

ஆனால், பத்திரிக்கைகளில் வந்த செய்தி தான் இது என்று மோடி கூறுகிறார்.

எந்தப் பத்திரிக்கை அது என்ற காங்கிரசின் கேள்விக்கு பாஜகவிடம் பதில் இல்லை.

இதையடுத்து நரேந்திர மோடி மீது வழக்குத் தொடரப் போவதாக காங்கிரஸ் எச்சரித்துள்ளது.

இந் நிலையில் மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் 2007ம் ஆண்டு பங்கேற்க பெண்கள் முன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகள்,

அதற்கு ஆன செலவு விவரத்தைக் கோரி திருப்தி ஷா என்ற பெண் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் குஜராத் அரசிடம் விளக்கம் கோரியுள்ளார்.

ஆனால், 5 ஆண்டுகள் ஆன பின்னரும் அதன் விவரத்தை மோடி அரசு இன்னும் தராமல் இழுத்தடித்து வருகிறது.

இது தொடர்பாக அவர் மீண்டும் மீண்டும் கடிதங்கள் அனுப்பியும் இதுவரை பதில் இல்லை.

இது தொடர்பாக குஜராத் பொதுத்துறை திருப்தி ஷாவுக்கு எழுதிய கடிதத்தில்,

மோடி 27 இடங்களில் மாநாடுகளில் பங்கேற்றதாக மட்டும் கூறியுள்ளது.

ஆனால், செலவு விவரத்தைத் தரவில்லை.

முதல்வரின் அலுவலகம் செலவு விவரத்தைத் தராததால், செலவை பூஜ்யம் என்று கணக்கிட்டுக் கொள்ளுமாறும் திருப்தி ஷாவுக்கு பொதுத்துறை கடிதம் எழுதியுள்ளது.

ஆனால், இதை ஏற்க முடியாது என்று கூறும் திருப்தி ஷா, இந்த 27 இடங்களுக்கும் மோடி ஹெலிகாப்டரில் பறந்தார். இதனால் ஏராளமாக செலவாகியுள்ளது.
எனவே விவரத்தை தந்தே ஆக வேண்டும் என்கிறார்.

இது தொடர்பாக குஜராத் தலைமை தகவல் கமிஷ்னருக்கு ஷா புகார் தரவே, இது குறித்து அவரும் விசாரித்து விளக்கம் தருமாறு அரசுக்கு உத்தரவிட்டார்.

ஆனாலும் இதுவரை மோடியின் அலுவலகம் விளக்கம் தரவில்லை என்று ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

SOURCE: THATSTAMIL

suvanappiriyan said...

திரு நம்பள்கி!

//சவுதியில் பொது சுகாதாரம் எப்படி? கொஞ்சம் எழுதுங்கள்...இலவசமா கட்டனமா? //

ஆண்கள் அதிகமாக மசூதிகளில் உள்ள கழிவறையை உபயோகப்படுத்திக் கொள்வார்கள். பெண்களுக்கும் சில பள்ளிகளில் கழிவறை வசதி உண்டு. பெரும் பெரும் வணிக வளாகங்களில் அந்த நிறுவனங்களே 10க்கு மேற்பட்ட கழிவறைகளை கட்டி அதை சுத்தமாகவும் பராமரிக்கிறார்கள். பொது கழிவறை சில இடங்களில உண்டு. கட்டணம் இல்லை. இது பற்றி நேரம் கிடைக்கும் போது விரிவாக எழுதுகிறேன்.